பிறந்தது முதல் விநோத நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவன் : மத்திய, மாநில அரசுகளை எதிர்பார்க்கும் பெற்றோர்!!

Author: Udayachandran
24 July 2021, 4:03 pm
Disease 1-Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனியருகே வினோத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் சிறுவனின் சிகிச்சைக்கும், அவனது பெற்றோருக்கும் மத்திய மாநில அரசுகள்‌ உதவிசெய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூரை சேர்ந்தவர்கள் காட்டப்பன்-செல்வி தம்பதி. இவர்களுக்கு 13 வயதில் காவியபாலன் என்ற ஆண்குழந்தை உள்ளது. சிறுவன் காவியபாலன் பிறந்தது முதலே வினோத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறான்.

பொதுவாக மனித உடம்பின்‌ தோல்கள் பல அடுக்குகளால் அமைந்திருக்கும்‌ நிலையில் சிறுவன் காவியபாலனுக்கு ஒரு அடுக்கு தோல்மட்டுமே இருப்பதால் பிறந்தது முதலே உடல்முழுவதும் தீக்காயம் பட்டது போல் இருப்பதாகவும், இதற்கு ஜீன்கள் தொடர்பான பிரச்சினையே காரணம்‌ என்று மருத்துவர்கள் கூறுவதாக சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பல் இடங்களில் மருத்துவம்‌ பார்த்தும் எவ்வித முன்னேற்றமும்‌, தீர்வும்‌கிடைக்கவில்லை என்று பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். தற்போது 8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் காவியபாலன் படிப்பில் படுசுட்டியாக விளங்குவதாகவும், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மகன் காவியபாலனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிட்டர் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே‌ மளிகைக்கடை வைத்தபடியே கணவன் மனைவி இருவரும் குழந்தையை கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா‌ காரணமாக வருமானமின்றி தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். காவியபாலனின் தந்தை காட்டப்பன் 12ம்வகுப்பும், தாய் செல்வி பி.ஏ.வும் படித்துள்ளனர்.

வினோத‌ நோயால் பாதிக்கப்பட்டுள்ள‌ சிறுவன்‌ காவியபாலனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மருத்துவ உதவிக்கு உதவிடவும், சிறுவனை வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள மனிதாபிமான அடிப்படையில் கணவன்-மனைவி இருவரில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுவேலை தந்து மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 175

0

0