13 வயது சிறுமியை கடத்தி வைத்து 5 நாட்களாக பாலியல் சித்ரவதை : வாகன சோதனையில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது!!

8 July 2021, 3:43 pm
Child Harassed - Updatenews360
Quick Share

திருப்பூர் : திருமண ஆசை கூறி 13 வயது சிறுமியை கடத்தி, 5 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்துவந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் அருகே தொரவலூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டேன்டில் ஆட்டோ ஓட்டிவரும் அனைப்பதி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 22) என்பவரிடம் நட்பாக பழகிவந்துள்ளார்.  

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி சிறுமிக்கு திருமண ஆசை கூறி பாலசுப்பிரமணி கடத்திச் சென்றுள்ளார்.  இது குறித்து சிறுமியின் பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  

இந்நிலையில் இன்று பெருமாநல்லூர் அருகே ஈரோடு சாலையில் பெருமாநல்லூர் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது ஆம்னி வேனில் பாலசுப்பிரமணி சிறுமியை கடத்திச் செல்வது தெரியவந்தது.

அவர்களை அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை கடத்திச் சென்ற பாலசுப்பிரமணி ஐந்து நாட்களுக்கும் மேலாக அறையில் அடைத்து வைத்து பாலியல் துன்பறுத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

பிறகு சிறுமியை சமாதானம் செய்து காரில் அழைத்தச் சென்றபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டதும் தெரியவந்தது.  இதையடுத்து பால சுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Views: - 379

0

0