130 அடி ஆழக் கிணறு : தவறி விழுந்த வாலிபருக்கு துணையான பாம்பு!!

30 September 2020, 6:11 pm
tirupur Well Youth- updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே 130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வட மாநில வாலிபரை பல்லடம் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமி கவுண்டம்பாளையத்தில் மிகவும் பாழடைந்த கிணற்றில் ஒருவர் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்தை அடுத்து சம்பவ இடம் சென்ற தீயணைப்பு துறையினர் 130 அடி ஆழ கிணற்றில் 30 அடி தண்ணீர் இருந்த கிணற்றில் வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்தனர்.மேலும் தண்ணீரில் ஆறடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று இருந்தது.

அந்த பாம்பிற்கு பயந்து ஒரிசாவை சேர்ந்த வடமாநில இளைஞர் மோட்டோ என்பவர் தலை கை மற்றும் கால்பகுதிகளில் அடிபட்டு தண்ணீருக்கு அருகே மின் மோட்டார் வைக்கும் தளத்தில் இருந்தார்.

அவரை உடனடியாக பலவேசமுத்து என்ற வீரர் இறங்கி கயிறு மூலம் கிணற்றுக்கு மேலே துறை பணியாளர்களின் உதவி கொண்டு பாதுகாப்பாக அந்த இளைஞர் மீட்கப்பட்டு முதலுதவி அளித்து பல்லடம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 5

0

0