14 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!!

16 September 2020, 1:31 pm
RAIN 1 - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ஆந்திர கடற்கரை மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வளிமண்டல சுழற்சியாக நீடிக்கிறது.

இதனால், கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.