சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: மணமகன் மீது வழக்கு

6 July 2021, 3:57 pm
Quick Share

சென்னை: சென்னை அருகே சிறுமிக்கு சட்ட விரோதமாக நடைபெற இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தி தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு இலவச தொலை பேசி எண் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், திரு.வி.க நகர் தீட்டி தோட்டம்  6 வது தெருவில் 14 வயது சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடக்க இருப்பதாக தெரிவித்தார். இதுபற்றி பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது , வீட்டில் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. உடனடியாக போலீசார் , திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் , சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் திரு.வி.க நகர் தீட்டி தோட்டம் பகுதி யைச் சேர்ந்த அயூப் (23) என்பவர் சிறுமியை திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மணமகனை தேடி வருகின்றனர்.

Views: - 78

0

0