சென்னையில் 144 தடை உத்தரவு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு….! காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி

1 August 2020, 2:44 pm
Chennai police updatenews360
Quick Share

சென்னை: தலைநகர் சென்னையில் 144 தடை உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மருத்துவ குழு, ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சசர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

அதேபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அல்லாத ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உத்தரவிட்டார். நாளை ஆகஸ்டு முதல் ஞாயிறு என்பதால் தளர்வுகளில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இந நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை தலைநகர் சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

சென்னையில் பொது இடங்களில் 5 க்கும் மேற்பட்ட மக்கள் கூட தடை தொடரும்.  மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆகஸ்ட்31ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று தமது உத்தரவில்  காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.