மதக்கலவரத்தை தூண்டிய பாதிரியாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.. பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!!!

Author: Udayachandran
24 July 2021, 5:34 pm
George Jailed -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மத உணர்வுகளைத் தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொது அமைதியை குலைக்க கூடிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதால் தக்கலையை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை காவல் நிலையத்தில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாதிரியார் தலைமறைவானதை தொடர்ந்து அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விருதுநகர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவருக்கு குழித்துறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

பின்னர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் குழித்துறை பாதிரியாரை நீதிமன்றக் காவலில் 15 நாட்கள் வைக்க உத்தரவிட்டதை அடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Views: - 357

0

0