15 வயது சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் காட்டி சில்மிஷம் : தலைமறைவான திமுக பிரமுகருக்கு போலீஸ் வலை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2021, 4:49 pm
Dmk Executive Escape -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : 15வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த திமுக பிரமுகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில் தனியார் மதுபான விடுதி நடத்தி வருபவர் திமுக பிரமுகரான சிவக்குமார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 9வயது சிறுவனை வைத்து மதுபான விற்பனை செய்தது ஏற்கனவே நமது தளத்தில் கூறியிருந்ததோம்.

இந்நிலையில் குஜிலியம்பாறை சேர்ந்த முத்து பொன்னரசி தனது கணவர் குமரேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக சிவகுமாருடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

முத்து பொன்னரசிக்கு 15 வயதில் நித்திகா என்ற மகள் உள்ளது. இந்நிலையில் சிவகுமார் நித்திகாவிற்கு செல்போனில் ஆபாசப் படங்களை காண்பித்து அந்தரங்க உறுப்புகளை தொடுவதாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் முத்து பொன்னரசி புகார் அளித்ததின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனர்.

Views: - 298

0

0