1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சுரங்க நீர் வழிப்பாதை : தஞ்சாவூரில் கண்டுபிடிப்பு!!

Author: Udayachandran
8 October 2020, 1:41 pm
Thanjai - Updatenews360
Quick Share

தஞ்சை : 1500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் பயன்பாட்டில் இருந்த சுரங்க நீர் வழிப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள சிவகங்கை குளத்தில் இருந்து அயன் குளத்திற்கு செல்லும் மன்னர்கள் கால சுரங்க நீர் வழித்தடங்கள் காலப்போக்கில் மறைந்த நிலையில், தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சமூக ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வழித்தடங்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்திருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த நீர் வழிப்பாதையில் அடைப்புகளை சரிசெய்ய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட 3 சேனல்களை அயன்குளம் அருகில் கண்டுபிடித்து அதை மீண்டும் அதிகாரிகள் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சிவகங்கை குளம் வரை மீதமுள்ள மற்ற சேனல்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது அயன் குளத்திற்கு தண்ணீர் செல்ல தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மற்ற பகுதிகளிலும் சேனல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சிவகங்கை குளத்தில் இருந்து அயன் குளத்திற்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

Views: - 48

0

0