செக்கிழுத்த செம்மல் வ.உ.சி 151வது பிறந்தநாள் விழா : இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே மாலை அணிவித்து மரியாதை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 4:09 pm
Voc admk - Updatenews360
Quick Share

இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையருக்கு எதிராக முதல் சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் என்பதால் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் வ.உ.சி.

மேலும், தேசத்தின் விடுதலைக்காக ஆயுள் சிறை சென்று, செக்கிழுத்தவர் என்பதால் செக்கிழுத்த செம்மல் எனும் அழைக்கப்படுபவர். இந்த போட்டதற்காக போராடிய வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி அவர்களின் உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேலு தலைமையில் வ.உ.சி அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் நிர்வாகிகள் சீனிவாசன், நாகநாதர்பாண்டி, பரமசிவம், பத்மநாபன், மாமன்ற உறுப்பினர் அரவிந்த் உட்பட நூற்றுக்கு மேற்பொருள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

போல் ஓபன்னீர்செல்வம் ஆதரவாளரான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் வ உ சி அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன், ஜவகர், மற்றும் ஆதரவாளர்கள் 50 க்குமேற்பட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் வ.உ.சி சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் திருச்சி மாநகராட்சி மேயர் சார்பாக தொண்டைமான் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 257

0

0