16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை : மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

Author: Babu
9 October 2020, 2:24 pm
RAin Alert - Updatenews360
Quick Share

சேலம், தருமபுரி உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்தமானை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால், அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் நிலை உள்ளது.

இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணமலை, நாமக்கல், நீலகிரி, கோவை உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Views: - 42

0

0