9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : காதலனுடன் அவரது நண்பரும் போக்சோவில் கைது

Author: Babu Lakshmanan
13 May 2022, 8:34 am
Quick Share

கோவை : கோவையில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவரது காதலன் மற்றும் நண்பரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை, அதே பகுதியில் வசிக்கும் சாரூக்கான் (19) என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கடந்த சில தினங்களுக்கு முன் தனது நண்பரான அருப்புக்கோட்டையை சேர்ந்த அன்சார் உசேன் (21) என்பவரது உதவியுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும், சிறுமிக்கு சாரூக்கான் பாலியல் தொல்லையளித்தாக தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் மறுநாளே சிறுமியை வீட்டிற்கு அனுப்பி விட்டு, இருவரும் தப்பியுள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் பேரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சாரூக்கான் மற்றும் அவரது நண்பர் அன்சார் உசேன் ஆகிய இருவரையும் விசாரித்த போலீசார், இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 738

0

1