குளித்தலையில் 16 வயது இளம் பெண்ணை 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 3 பேர் போக்சோவில் கைது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் பெற்றோர்கள், இவரை கடவூர் வட்டம், கோட்டக்கரையான்பட்டி செங்குளத்தில் உள்ள இளம்பெண்ணின் தாயின் பெற்றோர்களான தாத்தா வீட்டில் தங்கி அவர்களுக்கு உதவியாக இருக்குமாறு விட்டு விட்டு வந்தனர். அங்கு இருந்து வந்த இளம் பெண் ஆடு மாடுகளை மேய்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, அங்குள்ள சோளக்காட்டில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த முத்துவீரன் மகன் பெரியசாமி (வயது 60) என்பவர் சோளக்காட்டில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் , இதைப் பார்த்த சிறுமியின் சித்தப்பா (சித்தியின் கணவர்) மருதை மகன் இடும்பன் (31) என்பவர் பெரியசாமியை கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய இளம்பெண்ணின் சித்தப்பா இடும்பன் சிறுமியை வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த குமாரசாமி மகன் சஞ்சீவி (வயது 20) என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். சஞ்சீவி நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த 6 மாதமாகவே நடந்து வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமாருக்கு ஹெல்ப் லைன் மூலமாக தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து அவர் விசாரணையில் இறங்கியுள்ளார்.
பின்னர் அவர் இந்த சம்பவம் குறித்து குளித்தலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் மகளிர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து குற்றவாளிகள் 3 பேர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இன்று காலை குளித்தலை பெரிய பாலத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, பின்னர் அவர்களை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.