வண்டலூர் உயிரியல் பூங்காவில் 16 வயது வெள்ளைப்புலி உயிரிழப்பு

15 July 2021, 10:15 am
Quick Share

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல்நலம் பாதித்த வெள்ளைப்புலி ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல்நலம் பாதித்த 16 வயது பீஷ்மர் என்ற வெள்ளைப்புலி உயிரிழந்துள்ளது. இது மிகுந்த சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல்நலம் பாதித்த 16 வயது பீஷ்மர் என்ற வெள்ளைப்புலி உயிரிழந்தது. சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகளை வைத்து பராமரித்து வருகின்றனர். இதில், கடந்த மாதம் ஊழியர்கள் மூலமாக 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இரண்டு சிங்கங்கள் உயிரிழந்தன.

இந்நிலையில், வண்டலூர் வனவியல் பூங்காவில் பராமரித்து வரும் பீஷ்மர் என்ற 16 வயது வெள்ளை புலி கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதில் கிட்னி பாதிப்பு, பக்கவாதம், அல்சா் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் கடந்த 2 நாட்களாக அதன் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இரு நாட்களாக உணவு, தண்ணீா் கூட உட்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து உயிரியல் பூங்கா மருத்துவ குழுவினா் தீவிர சிகிச்சையளித்து கண்காணித்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணியளவில் வெள்ளை புலி பரிதாபமாக உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 48

0

0