1688 பயனாளிகளுக்கு 5 கோடியே 85 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கல்…!!

18 November 2019, 10:10 pm
perambalur Fund Function-Updatenews360
Quick Share

பெரம்பலூர்: பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 1688 பயனாளிகளுக்கு 5 கோடியே 85 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டUத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் சட்ட மன்ற உறுப்பினர்கள் RT ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுய உதவிக் குழுவை சேர்ந்த 1688 பயனாளிகளுக்கு 5 கோடியே 85 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயமும். வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.