அரசு வழக்குகளில் ஆஜராக 17 தற்காலிக வழக்கறிஞர்கள் : தமிழக அரசு நியமனம்!!

14 May 2021, 2:14 pm
Chennai High Court- Updatenews360
Quick Share

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராக 17 வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றியடைந்ததும், முந்தைய ஆட்சிக்காலத்தில் அரசு வழக்கறிஞர்கள் பதவியில் இருந்து விலகினர்.

இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை ஆளுநர் நியமனம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் முதன்மையான வழக்குகளில் ஆஜராகி வந்தார்.

இந்தநிலையில் புதிய அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் நடைமுறைகளை முடிக்கும் வரை தற்காலிகமாக 17 வழக்கறிஞர்களை நியமிக்க தமிழக அரசுக்கு தலைமை வழக்கறிஞர் நியமிக்கப்பட்டனர்.

Views: - 124

0

0