17 வயது சிறுமிக்கு காதல் வலை வீசி பாலியல் பலாத்காரம் : போலீசார் பொறியில் சிக்கிய இளம்பொறியாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2021, 4:17 pm
Harrassed Youth Arrest -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரத்தை சார்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினியரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பொறியாளரான சிவசந்திரன் (வயது 28). இவர் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் சிறுமியை என்ஜினியர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. சிவசந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

Views: - 465

0

0