மதுரை கூர்நோக்கு இல்லத்தில் ரகளையில் ஈடுபட்ட 18 சிறுவர்கள் : வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடிவு!!

Author: Udayachandran
7 October 2020, 2:46 pm
Child Jail - updatenews360
Quick Share

மதுரை : கூர்நோக்கு இல்லத்தில் ரகளையில் ஈடுபட்ட 18 சிறார்களை வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை ரிங் ரோடு வண்டியூர் சோதனைச்சாவடி பகுதியில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை மதுரை சட்டம் ஒழுங்கு காவல்துணை ஆணையர் சிவபிரசாத் தொடங்கி வைத்தார்,

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் லில்லி கிரேஸ், காவல் ஆய்வாளர் பூமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர், தொடர்ந்து செய்தியாளர்களிடம் காவல் துணை ஆணையர் சிவபிரசாத் பேசுகையில்,

மதுரை மாநகர பகுதிகளில் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது,மேலும் மதுரை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாகவே மதுரை மாநகரில் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் மதுரை மாவட்ட கூர்நோக்கு பள்ளியில் இன்று சிறார்களுக்கு இடையே நடைபெற்ற ரகளையில் ஒரு சில சிறார்கள் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக கூர்நோக்கு பள்ளியின் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. கூர்நோக்கு இல்லத்தில் பல பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்,மேலும் கூர்நோக்கு பள்ளியில் உள்ள 36 மாணவர்களில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 18 மாணவர்களை புதுக்கோட்டை,விருதுநகர், திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய மாஜிஸ்திரேட் அறிவுறுத்தி உள்ள நிலையில் அவர்களை விரைவில் இடமாற்றம் செய்யபடுவார்கள் என தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிவருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க ஆட்சியர் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Views: - 48

0

0