போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த 18 வயது இளைஞருக்கு கத்திக்குத்து : பக்கத்து வீட்டு இளைஞர் கைது!!!

20 July 2021, 6:56 pm
Pocso Attack -Updatenews360
Quick Share

திருப்பூர் : போக்சோ சட்டத்தில் தேடப்படும் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுக்கா, முத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சாரதி (வயது 18). இவர் திருப்பூர் காசிபாளையம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை காம்பவுண்டில் வசித்து எம்பிராய்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர் அந்த பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமியிடம் தவறாக பழகி வந்துள்ளார். இதனை பார்த்த அண்டை வீட்டில் வசிக்கும் மதி, மணிபாரதி ஆகியோர் இது குறித்து சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், சாரதி மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் சாரதியை தேடி வந்தனர்.

இது குறித்து தகவலறிந்த சாரதி, குடிபோதையில் சம்பவத்தை சிறுமி வீட்டிற்கு தெரியப்படுத்தியதை குறித்து மணிபாரதி, மதியிடம் தகராறு செய்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதி அருகில் கத்தியால் சாரதியின் வயிறு, கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தி, வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இது குறித்து அக்கம்பக்கம் இருந்தவர்கள் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சாரதியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மதியை கைது செய்து சிறையிலடைத்தனர். சாரதியை சிகிச்சை முடிந்த பின் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Views: - 276

0

0