33 வயது ஆணுடன் குடும்பம் நடத்திய 18 வயது இளைஞர் : ஓரினச்சேர்க்கையால் உயிர் போன பரிதாபம்!!

6 November 2020, 12:56 pm
Homosex Murder- Updatenews360
Quick Share

திண்டுக்கல் : நத்தம் அருகே இளைஞர் கொலை செய்யபட்ட வழக்கில் கூலித் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் ஸ்ரீகாந்த் (வயது 18). இவர் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்தவர். இதைத் தொடர்ந்து அவர் விடுமுறையில் தனது சொந்த ஊரான ரெட்டியபட்டிக்கு வந்திருந்தார்.

நேற்று இரவு ஊருக்கு ஒதுக்குபுறமாக ஸ்ரீகாந்த் கழுத்து அறுக்கபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவலறிந்த நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைபற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கபட்டன.மேலும் ரெட்டியபட்டியில் அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து கொலையாளியை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே அதே ஊரைச் சேர்ந்த கூலிதொழிலாளியான கண்ணன் (எ) ராமச்சந்திரன்(வயது 33) மாமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டஸ்ரீகாந்த்,ராமச்சந்திரன் இருவரும் பல வருடங்களாக ஓரினசேர்க்கை முறையில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதற்கான கடிதமும் சிக்கியது.

இந்நிலையில் ஸ்ரீகாந்த்திற்கும், ராமச்சந்திரனுக்கும் இந்த உறவில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் கொலையாளியை தேடி வருவதாக நினைத்து பயந்து ராமச்சந்திரன் அங்குள்ள ஒரு மாமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்தது.
இந்த இரண்டு சம்பவத்தினாலும் ரெட்டியபட்டி கிராமமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 34

0

0