கோவையில் இன்று 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

11 November 2020, 8:06 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 189 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அதன்படு, கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 168 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 44 ஆயிரத்து 65 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1,038பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 18

0

0