அரிசியில் விஷம் வைத்து 19 மயில்கள் உயிரிழப்பு : விவசாயியை கைது செய்தது வனத்துறை!!

17 July 2021, 6:23 pm
Tirupur Peacock- Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே 19 மயில்கள் உயிரிழந்த சம்பவத்தில் விவசாயி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வலசுபாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடந்தன. அதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த திருப்பூர் வனச்சரக அலுவலர் காசிலிங்கம், வனவர் திருமூர்த்தி தகைமையிலான வனத்துறையினர் இறந்து கிடந்த மயில்களின் உடலை மீட்டனர்.

7 ஆண் மயில்கள், 12 பெண் மயில்கள் என 19 மயில்கள் இறந்து கிடந்தன. மயில்களின் உடலை கால்நடை மருத்துவர் அறிவுச்செல்வன் வனத்துறையினர் முன்னிலையில் அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டார்.

பரிசோதனையில் தோட்டத்தில் கிடந்த அரிசிகளை சாப்பிட்டதில் மயில்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. அதனை அடுத்து தோட்டத்து உரிமையாளரான விவசாயி பழனிச்சாமியை கைது செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயத்திற்கு இடையூறாக இருந்ததால் மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 19 மயில்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 339

0

0