தேசிய தடகள போட்டியில் 3வது இடம் பிடித்த தமிழகம்.. சாதனை படைத்த வீரர்களுக்கு தமிழக பாராலிம்பிக் தலைவர் பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
27 March 2021, 7:07 pm
Quick Share

19வது தேசிய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 3வது இடத்தை பிடித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிக்கான 19வது தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழக வீரர் வீராங்கனைகள் 111 பேர் பங்கேற்றனர்.

பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. தமிழக மாற்றுத்திறன் வீரர்-வீராங்கனைகள் 12 தங்கம், 19 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்கள் பெற்று தேசிய மூன்றாம் படம் பிடித்து சாதனை செய்தனர்.

பதக்கம் பெற்ற வீரர்களின் விவரங்கள் :

 1. ரூபா (மதுரை) – குண்டு எறிதல் – தங்கம்
 2. சங்கர் சத்யா (மதுரை) – குண்டு எறிதல் – வெள்ளி
 3. அருண்மொழி (மதுரை) – குண்டு எறிதல் – வெண்கலம்
 4. கோகுல் ஸ்ரீனிவாஸ் (சென்னை) – நீளம் தாண்டுதல் – தங்கம்
 5. சோனை (மதுரை) – குண்டு எறிதல் – வெண்கலம்
 6. தங்கராஜ் ( ராணிப்பேட்டை) – நீளம் தாண்டுதல் – வெண்கலம்
 7. சஞ்சய் (வேலூர்) – குண்டு எறிதல் – தங்கம்
 8. திவ்யபாரதி (மதுரை) – குண்டு எறிதல் – வெண்கலம்
 9. மனோஜ் (மதுரை) – குண்டு எறிதல் – தங்கம்
 10. கணேசன் (மதுரை) – குண்டு எறிதல் – வெள்ளி
 11. முத்து மீனா (தூத்துக்குடி) – குண்டு எறிதல் -தங்கம்
 12. மீனா (கடலூர்) குண்டு எறிதல் – வெள்ளி இரண்டாம் நாள் பதக்கப் பட்டியல் விவரம்
 13. கஜன் கவுதம் (தேனி) – T20, 1500 மீ – வெள்ளி
 14. லட்சுமி நரசிம்மன் – (சென்னை) – T20,1500 மீ – வெண்கலம்
 15. சித்ரா (கடலூர்) – T11, 100 மீ – வெள்ளி
 16. மனோஜ்குமார் – (கோவை) – T54, 100 மீ – தங்கம்
 17. மணிகண்டன் (சென்னை) – T54, 100 மீ – வெண்கலம்
 18. மீனா (கடலூர்), T36, 100 மீ – தங்கம்
 19. கலைச்செல்வி (சென்னை), T53, 100 – தங்கம்
 20. திவ்யா (சென்னை), T53, 100 – வெள்ளி
 21. மாரியப்பன் (சேலம்) – உயரம் தாண்டுதல் – வெள்ளி
 22. கோகுல் ஸ்ரீனிவாஸ் (சென்னை) – 400 மீ., – தங்கம்
 23. லட்சுமி நரசிம்மன் (சென்னை) – 400 மீ., – வெள்ளி
 24. பிரசாந்த் (மதுரை) – 400 மீ., – வெள்ளி
 25. மனோஜ்குமார் (கோவை) – 400 மீ., – வெள்ளி
 26. மணிகண்டன் (சென்னை), 400 மீ., – வெண்கலம்
 27. வெங்கடேஷ் (ராமநாதபுரம்), 100 மீ., – வெள்ளி
 28. தங்கராஜ் (ராணிப்பேட்டை), 100 மீ., – வெண்கலம்
 29. சிவகாமி (அரியலூர்) – குண்டு எறிதல் – வெள்ளி
 30. கலைசெல்வி (மதுரை) – குண்டு எறிதல் – வெண்கலம்

3வது நாள் பதக்கப்பட்டியல் விபரம் :

 1. ஷாலினி (மதுரை) – தட்டு எறிதல் – தங்கம்
 2. திருமலை ( ராணிப்பேட்டை) – ஈட்டி எறிதல் – வெள்ளி
 3. ரூபா (மதுரை) – தட்டு எறிதல் – வெள்ளி
 4. கிருஷ்ணன் (சேலம்), 200 மீ., வெள்ளி
 5. மனோஜ்குமார் (கோவை) – 200 மீ., – வெள்ளி

6.மணிகண்டன் (சேலம்) – 200 மீ., – வெள்ளி

 1. செல்வராஜ் (புதுக்கோட்டை) – ஈட்டி எறிதல் – வெண்கலம்
 2. திவ்யா (சென்னை) – 200 மீ., – தங்கம்
 3. கலைசெல்வி (சென்னை) – 200 மீ., -வெள்ளி
 4. கீர்த்திகா (கோவை) ஈட்டி எறிதல் – வெள்ளி
Para olympic 1- updatenews360

வெற்றி பெற்ற பாராலிம்பிக் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை நேரில் சந்தித்த தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அப்போது, சாதனை செய்யுங்கள்… உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணையாக இருப்போம் என்று அவர் நம்பிக்கையூட்டினார்.

இந்த சந்திப்பின் போது செயலாளர் ஆனந்தஜோதி, பொருளாளர் விஜயசாரதி மற்றும் அனைத்து நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தமிழக அணியை வழிநடத்திய அணி மேலாளர் சார்லஸ், தமிழக அணி பயிற்சியாளர் ரஞ்சித் குமார், மதன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Views: - 329

0

0