சென்னையில் திரைப்படபாணியில் ரூ.2.25 லட்சம் வழிப்பறி..! போலீசார்போல் நடித்து நூதன கொள்ளை..!

30 August 2020, 1:13 pm
Quick Share

சென்னை மந்தைவெளியில் முட்டை வியாபாரியிடம் போலீஸ்போல் நடித்து ரூ.2.25 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மந்தைவெளி அடுத்த சிருங்கேரி மடம் சாலை வழியாக முகமது என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, காக்கி உடை அணிந்துகொண்டு இருந்த இருவர் முகமதுவின் வாகனத்தை மடக்கி விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர்கள் போலீசார் என நினைத்து முகமதுவும் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார். இதனை அடுத்து அவரிடம் இருந்த பையை வாங்கிய அவர்கள், அதில் இருந்த ரூ.2.25 லட்சம் பணத்தை கையில் எடுத்துக்கொண்டு, இந்த பணம் யாருடையது, எப்படி கிடைத்தது என அதட்டியுள்ளனர்.

தொடர்ந்து பணத்தை எடுத்துக்கொண்டு இருவரும் மந்தைவெளி காவல் நிலையத்துக்கு வந்து கணக்கு காட்டுமாறு கூறிச் சென்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் மந்தைவெளி காவல் நிலையத்திற்கு சென்று கேட்டபோது, காவலர்கள் யாரும் சோதனையில் ஈடுபடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது நடந்ததை புகாராக எழுதி பெட்டிஷன் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், போலீசார்போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Views: - 34

0

0