தபாலில் வாக்களிக்க 2.44 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்…!!

Author: Aarthi Sivakumar
19 March 2021, 1:53 pm
post vote -updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் தபால் வாக்களிக்க தற்போது வரை 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பின் கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. அதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும், 80 வயதுக்கு மேற்பட்டோர் ஓட்டுச்சாவடிக்கு வருவதை தவிர்க்க, தபால் ஓட்டு வசதி செய்யப்பட்டுள்ளது.

படிவம்-12டி மூலம், தபால் ஓட்டு பெற தகுதியான வாக்காளரின் விருப்பத்தை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அறிந்து வருகின்றனர். இதன்படி, தற்போது வரை 2லட்சத்து 44ஆயிரத்தி 922 பேர் தபால் ஓட்டுப்போட விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,

காவல்துறையினர் – 2,770 பேர், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் – 33,189பேர், மாற்றுத்திறனாளிகள் – 49லட்சத்து114ஆயிரத்தி80 பேர், வயதுக்கு மேற்பட்டவர்கள் – 1 லட்சத்து 59 ஆயிரத்தி 849 பேர், அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டவர்கள் – 35 பேர் என மொத்தம் 2லட்சத்து 44ஆயிரத்தி 922 பேர் தபால் ஓட்டுப்போட விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 155

0

0