குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த சிறுவன் உட்பட 2 பேர் கைது

6 July 2021, 4:56 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடியில் குழந்தைகளின் ஆபாச படம் பார்த்து, அதை முகநூலில் பதிவேற்றம் செய்த சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தனியார் அமைப்புடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்து வருகின்றனர். அதன்படி ஆபாச படங்களை 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்கக் கூடாது. அதே நேரத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை யாருமே பார்க்க கூடாது , பதிவேற்றம் செய்ய கூடாது போன்ற உத்தரவுகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் இதனை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதைப் போன்ற ஒரு சம்பவம் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் மீண்டும் நடந்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் 2020ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக 2 பேஸ்புக் ஐ.டி களை சைபர் கிரைம் போலீசாருக்கு கொடுத்து அதனை கண்டு பிடிக்கும் படி கூறியிருந்தனர்.அந்த வகையில் சைபர் கிரைம் போலீசார் புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு இந்த வழக்கை மாற்றினர். அந்த வகையில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் இரண்டு ஃபேஸ்புக் ஐடிகளை   வைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர்.

Views: - 151

0

0