இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை : கொடைக்கானலில் 2 பேர் கைது!!

14 July 2021, 1:14 pm
cannabis arrest - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் நகர் பகுதிகளில் கஞ்சா விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொடைக்கானல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த குமார் (வயது 40), இதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 38), ஆகிய இருவரும் இதே பகுதியில் கஞ்சா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா விற்ற குமார் மற்றும் விஜயகுமாரை கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்

Views: - 194

0

0