நடிகர் சூரியிடம் ரூ. 2 கோடியே 70 லட்சம் மோசடி: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை மீது வழக்குப்பதிவு…!!!

9 October 2020, 11:14 am
actor soori - updatenews360
Quick Share

சென்னை: நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். சம்பள பாக்கியை பணமாக தருவதற்கு பதில் நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

ஆனால் பணத்தையும் திரும்ப தராமல், நிலத்தையும் கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றியதாக நடிகர் சூரி தரப்பில் புகாரளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் அன்புராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது அடையாறு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: - 47

0

0