4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை : பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2021, 3:10 pm
School Leave - Updatenews360
Quick Share

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.

இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது.

வடசென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கி நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அறிவுறுத்தியுள்ளேன் என்றும், சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படை, காவல்துறை, தீணையப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், வரும் 3 நாட்களுக்கு வெளியூர் மக்கள் சென்னைக்கு வருவதை தவிர்க்குமாறும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Views: - 239

0

0