புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

Author: Udhayakumar Raman
28 November 2021, 7:40 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக, நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர்.தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Views: - 241

0

0