ஓரினச்சேர்க்கைக்காக வந்த அழைப்பு… நிர்வாணமாக்கி பணம் பறிப்பு : வசமாக சிக்கிய 3 பேர்!!

Author: Babu Lakshmanan
12 August 2021, 4:48 pm
gay shadow - updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி அருகே ஓரினச்சேர்க்கைக்காக வந்தவர்களை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை குற்றமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கென தனி ஆப்கள் தொடங்கப்பட்டு, ஓரினச்சேர்க்கையாளர்கள் பேசி, தங்களின் இச்சைகளை தீர்த்து வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த இருவர் ஆப் மூலம் பேசி, ஓரினச்சேர்க்கைக்காக சென்றுள்ளனர்.

அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். மேலும், இருவரையும் நிர்வாணமாக்கி, அதனை வீடியோவாகப் பதிவு செய்து கொண்டனர். பின்னர், அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டதுடன், வெளியே சொன்னால் இந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி அனுப்பியுள்ளனர்.

பாதிக்கப்போட்டோர் அளித்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் நடத்திய விசாரணையில், கர்நாடகாவின் சர்ஜாபுரத்தை சேர்ந்த நாகராஜ் (33), சுனில் (28) மற்றும் ஒசூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Views: - 320

0

0