2 கிலோ திமிங்கல எச்சம் மும்பைக்கு கடத்த முயற்சி… 6 பேரை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்… பின்னணியில் மோசடி கும்பல்…?

Author: Babu Lakshmanan
22 July 2022, 10:01 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு கடத்தல் இருந்த 2 கிலோ திமிங்கல எச்சம் பிடிபட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து திமிங்கில எச்சம் மும்பைக்கு கடத்த இருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட உதவி வன பாதுகாவலர் சிவகுமார் தலைமையில் வன அதிகாரிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்தது.

அந்த ரயிலை சோதனை செய்ததில், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அழகிய பாண்டிபுரம் அருகே உள்ள கடிகாரம் மனத்தைச் சேர்ந்த தினகரன் லாசர் (36) என்பது தெரிய வந்தது. அவரிடம் இரண்டு கிலோ திமிங்கலே எச்சம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறையர் அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெருவிளையை சேர்ந்த அருள், மகேஷ், பாரதிபுரத்தைச் சேர்ந்த திலீப் குமார், ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த சதீஷ், தம்மத்து கோனத்தைச் சேர்ந்த சுபா தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

Views: - 965

0

0