மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய 2 பேர் பலி : மின்னல் தாக்கி உயிரிழந்த பரிதாபம்!!

14 May 2021, 3:21 pm
Lightning Dead - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே முருங்கைக்காய் பறிக்க சென்ற போது மழைக்காக மரத்தடியில் நின்ற இருவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் கோட்டைபாண்டி (வயது 55) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த வானமுள்ளசாமி என்பவரின் மகன் ரமேஷ்(வயது 30) இருவரும் அக்கிராமத்தில் உள்ள முருங்கைக்காய் தோட்டத்தில் முருங்கைக்காய் பறித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது கனமழை பெய்ததால் இருவரும் முருங்கை தோட்டத்தின் அருகே இருந்த வேப்பமரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதன் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளத்தூர் போலீஸார் உயிரிழந்த இருவரின் உடலைகளையும் கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 95

0

0