வீட்டினுள் தாழிட்டு தவித்த 2 வயது குழந்தை : தீயணைப்புத்துறையினர் நடத்திய போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 8:19 pm
Baby Rescue - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வீட்டில் அறைக்குள் உள்புறமாக தாழிட்டு கொண்டு தவித்த குழந்தையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல் விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அசாரூதின் , இவரது ஒன்றரை வயது குழந்தை ஆசாத், வீட்டின் ஒரு அறைக்குள் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு வெளியே வரத்தெரியாமல் தவித்துள்ளனர்.

இதையடுத்து தவித்த பெற்றோர் கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடைக்க முடியாததால் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் விரைந்து சென்று ஹைட்ராலிக் ஓபனர் மூலம் கதவை திறந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

குழந்தையின் பெற்றோர்கள் தீயணைப்புத் துறையினருக்கு ஆனந்த கண்ணீருடன் நன்றியை தெரிவித்தனர். இதை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Views: - 241

0

0