பெற்றோர்களே உஷார்.. நூடுல்சை சாப்பிட்ட 2 வயது குழந்தை பரிதாப பலி : ஷாக் தகவல்… உடலை கைப்பற்றி விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2022, 8:32 pm
Noodles Baby Dead - Updatenews360
Quick Share

திருச்சி : முதல் நாள் சமைத்த நூடுல்சை சாப்பிட்ட 2 வயது குழந்தை பலியான நிலையில் உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், நெ1 டோல்கேட் அடுத்துள்ள தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் – மகாலெட்சுமி தம்பதி. இவர்களது 2வயது ஆண் குழந்தை சாய்தருண்.
சாய்தருணிற்கு நேற்று இரவு தாய் மகாலெட்சுமி நூடுல்ஸ் சமைத்து கொடுத்துள்ளார்.

மீதமுள்ள நூடுல்ஸை குளிர்சாதன பெட்டி வைத்தார். மீண்டும் இன்று காலையில் அதே நுாடுல்ஸை குழந்தைக்கு காலை உணவாக கொடுத்தார். இதனை சாப்பிட்டதை தொடர்ந்து குழந்தை மதியம் வரை வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாலை குழந்தை திடீரென வாத்தி எடுத்து சுருண்டு கீழே விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மகாலெட்சுமி குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு குழந்தை நூடுல்ஸை உண்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

Views: - 360

0

0