தடம் மாறும் இளைய தலைமுறை: பெண்களிடம் தொடர் வழிப்பறி….சிசிடிவி காட்சிகளால் சிக்கிய இளைஞர்கள்!!

Author: Aarthi Sivakumar
17 September 2021, 5:42 pm
Quick Share

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் வழிப்பறி, மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவரை பீளமேடு போலிசார் சி.சி.டி.வி.காட்சி உதவியுடன் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி, காந்திபுரம், கொடிசியா, ஒண்டிபுதூர், ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வழிபறி, செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெருவதாக காவல்துறையினர்களுக்கு வந்த தகவல்களை அடுத்து போலிசார் தீவிர வாகன சோதனைகளிலும், ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவை காந்திமாநகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி.காட்சிகளை ஆய்வு செய்தபோது இருவர் வேகமாக ஸ்க்கூட்டரில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் அன்னூர், புதுகாலணியை சேர்ந்த கண்ணன், மற்றும் கோவை உப்பிலிபாளையம் ஸ்ரீனிவாசா வீதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களிடம் நடத்திய விசாரனையில் கோவையில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இருவரையும் கைதுசெய்த போலிசார் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 208

0

1