20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்… 4 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு : தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2023, 8:36 am
TN Sec- Updatenews360
Quick Share

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலூர் எஸ்பியாக அசோக்குமாரும், சென்னை ரெயில்வே எஸ்பியாக பொன் ராமுவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசைத்தம்பி திருப்பூர் எஸ்பியாகவும், சென்னை தலைமை அலுவலக எஸ்பியாக ரவிசேகரனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு எஸ்பியாக முத்துகருப்பனும், ஆவடி ரெஜிமண்ட் மைய எஸ்பியாக ஜானகிராமனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை காவல் ஆணையர் அலுவலக எஸ்பியாக மங்களேஸ்வரனும், சென்னை பயிற்சி கல்லூரி எஸ்பியாக சந்திரமவுலியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்பியாக மாரிராஜனும், சென்னை சைபர் க்ரைம் எஸ்பியாக மோகன் நவாஸும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை டிஜிபி அலுவலக எஸ்பியாக சுப்புராஜும், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் சென்னை எஸ்பியாக கெங்கைராஜும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Views: - 72

0

0