20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிய சோகம் : கண்ணீரில் மூழ்கிய விவசாயிகள்!!

18 January 2021, 5:41 pm
Farmland Submerged - Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : குத்தாலம் அருகே சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல், பாலையூர், நச்சினார்குடி, ஸ்ரீ கண்டபுரம், மேக்கிரிமங்கலம் ஆகிய பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த தொடர் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் மேலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தை மாதத்தில் நெற்பயிர்கள் அறுவடை செய்து நெல்மணிகள் தானிய கிடங்கு வருடந்தோறும் அனுப்பப்படும். தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளன. மேலும் தாழ்வான பகுதிகளிலும் வயல்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதாக இல்லை எனவும் 50 மற்றும் 60% நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பத்து நாட்களுக்கு மேலாக பெய்த கன மழையால் பயிர்கள் மூழ்கியுள்ள நிலையில் போட்ட முதலே எடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த குறுவை சாகுபடி செய்வது கேள்விக்குறியாக உள்ளது எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு ஏக்கருக்கு 20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0