மழையில் நனைந்து 200 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம் : கண்ணீருடன் விவசாயிகள் போராட்டம்!!

9 July 2021, 4:12 pm
Crops Damaged - Updatenews360
Quick Share

மதுரை : மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த மழை காரணமாக சமயநல்லூர், தேனூர், தோடனேரி, ஊர்மெச்சிக்குளம், கட்டப்புளி நகர் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் நெல் பயிர்கள் தொடர் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழுகிய நெல் பயிர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்

Views: - 147

0

0