நாளை அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் : சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

8 January 2021, 6:18 pm
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க நாளை சென்னையில் அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றன. வெற்றி நடை போடும் தமிழகம் என்னும் பெயரில் அதிமுகவின் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டு, அதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நாளை அதிமுக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரம் வழங்குவது, கூட்டணியை இறுதி செய்வது மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

Views: - 0

0

0