20வது முறை… 2 லட்சம் ரூபாய் : அசத்தும் மதுரை யாசகரின் கொரோனா நிவாரண நிதி!!

4 November 2020, 1:41 pm
Beggar Man Fund-updatenews360
Quick Share

மதுரை : 20வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிதியாக ஆட்சியரிடம் யாசகர் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த  பூல்பாண்டியன் இவருக்கு இரு மகன்கள் , ஒரு மகள் என 3பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில் மனைவி இறந்தபின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துவருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற 10ஆயிரம் பணத்தை கடந்த சில மாதங்களாக கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய நிலையில் இன்று 20வது முறையாக 10ஆயிரம் ரூபாயை பொதுமக்களிடம் யாசகம் பெற்று அதனை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் வழங்கினார்.

இவர் ஏற்கனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிச்சையெடுத்த பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இவருடைய சேவையை பாராட்டி ஆட்சியர் விஜய் சுதந்திர தினத்தில் விருது வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 2 லட்ச ரூபாய் கொரானா நிவாரண நிதியாக யாசகர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Views: - 27

0

0