22 வயதில் உள்ளாட்சி அமைப்பை ஆளும் இளம்பெண் : ஒன்றியத் தலைவராக மூத்த முன்னாள் திமுக பிரமுகரின் பேத்தி தேர்வு!!
Author: Udayachandran RadhaKrishnan22 October 2021, 4:50 pm
விழுப்புரம் : 22 வயதில் விக்கிரவாண்டி ஒன்றிய பெருந்தலைவராக ஒருமனதாக பட்டதாரி இளம்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து இன்று மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு தலைவர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றியக்குழு துணைத் தலைவர், மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதிவுகளுக்கு இன்று காலை முதல் தேர்தல் நடைபெற்று வருகின்றன.
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 21 கவுன்சிலர்களில் 16 திமுகவும், 3 அதிமுகவும், 2 இடங்களில் வி.சி.கவும் வெற்றி பெற்றன. ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் இன்று காலை நடைபெற்றது.
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் 17 வது வார்டு சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த சங்கீத அரசி திமுக சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.
இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சங்கீத அரசி விக்கிரவாண்டி ஒன்றிய குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 22 வயதான சங்கீத அரசி பிஎஸ்சி இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
இவர் அண்ணா கலைஞரோடு நெருங்கிப் பழகிய திமுக மூத்த முன்னோடி ஜெயராமனின் பேத்தி ஆவார். இவருக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் திமுகவினர் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
0
0