225 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : ஆட்டோ டிரைவர் தப்பி ஓட்டம்
4 December 2019, 10:11 pm
கோவை: கோவையில் ஆட்டோ ரிக்ஷாவில் கடத்த முயன்ற 225 கிலோ ரேஷன் அரிசியை வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை பூ மார்க்கெட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பு தாசில்தார் சிவக்குமார் பறக்கும்படை தலைமையிலான வழங்கல் துறை அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ ரிக்ஷா ஒன்று வந்தது அதை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் வழங்கப்படும் 225 கிலோ ரேஷன் அரிசி 9 பைகளில் இருந்தது தெரியவந்தது. வண்டியில் கடத்தல் அரிசி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை சுதாரித்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் அன்சுருதீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து அரிசியுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை பொள்ளாச்சி உணவு பிரிவு போலீசாரிடம் அதனை ஒப்படைத்தனர்.