கொலையில் முடிந்த 2K கிட்ஸ் திருமணம்… இளம் மனைவியை கொல்ல 20 வயது கணவர் நடத்திய நாடகம் : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2023, 9:24 am
Wife Murder - Updatenews360
Quick Share

கோவையில் இளம் மனைவியை கொலை செய்த கணவர், கொலைக்கு உடந்தையாக நாடகமாடிய பெண்ணின் மாமியார், மாமனார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20) தனது கல்லூரியில் உடன் படித்த ரமணி (வயது 20) என்ற பெண்ணை காதலித்து கடந்த 6 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார்.

பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து, சஞ்சய் வீட்டில், சஞ்சயின் தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சஞ்சய் கல்லூரியில் உடன் படிக்கும் மற்றொரு பெண்ணிடம் செல்போனில் பேசியது தொடர்பாக மனைவி ரமணிக்கு கோபம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ரமணியை சஞ்சை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

கொலையை மறைப்பதற்காக தனது அம்மா, அப்பாவுக்கு போன் செய்ததையடுத்து, இருவரும் வீட்டுக்கு வந்து இறந்து போன ரமணியின் உடலில் அணிந்திருந்த உடையை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் பொடியை கரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்கவைத்து துணிகளை மாற்றிவிட்டு சாணிப்பவுடர் குடித்தது போல மற்றவர்களை நம்பவைக்க, அக்கம்பக்கம் உள்ளவர்களை கூவி அழைத்து புளியைக் கரைத்து ஊற்றியும் பின்பு ஆலாந்துறை தனியார் மருத்துவமனைக்கு ரமணி உடலை தூக்கிசென்று மருத்துவரிடம் காண்பித்து, பின்பு பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அலுவலில் இருந்த பெண் மருத்துவர் ரமணி உடலை பரிசோதித்து இறந்து விட்டதாக கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்து காருண்யா நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ரமணி இறந்தது தெரிய வந்தது.

பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்மூலம் அனுப்பி வைத்துள்ளனர். சஞ்சய் தனது தந்தை, தாய் உதவியுடன் ரமணி தற்கொலை செய்துகொண்டது போல் நாடகமாடி உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரமணி தந்தை அளித்த புகாரில் காருண்யா நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ரமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

29ஆம் தேதி சம்பவம் நடந்தபோது முதலில் சந்தேக மரணம் பதிவு செய்யப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்த நிலையில், விசாரணைக்கு பின் கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தொடர்ந்து, கணவர் சஞ்சய், மாமியார் பக்ருநிஷா, மாமனார் லட்சுமணன் ஆகியோரை காருண்யா நகர் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Views: - 333

0

0