2வது மனைவியை தாயாக்கி விட்டு.. முதல் மனைவியுடன் குடும்பம் நடத்தும் கணவன்… கைக்குழந்தையுடன் பெண் தர்ணா..!!

Author: Babu Lakshmanan
21 September 2021, 4:01 pm
Quick Share

கரூர் : கரூரில் கணவனால் கைவிடப்பட்ட இரண்டாவது மனைவி பச்சிளம் குழந்தையுடன் முதல் மனைவி வீட்டின் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கௌசல்யா என்பவரை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இவருக்கு முதல் திருமணம் ஆனது கௌசல்யாவுக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கரூர் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், இரண்டாவது மனைவிக்கு 8 மாத ஆண் குழந்தை இருப்பதால் கைவிடக் கூடாது என்று கூறியதன் பேரில் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக முதல் மனைவியின் வீட்டுக்கு சென்ற கணவர், தனது வீட்டிற்கு வருவதில்லை எனவும், எந்தவித பொருளாதார உதவியும் செய்யாத நிலையில் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, காமராஜபுரம் பகுதியில் உள்ள முதல் மனைவியின் வீட்டின் முன்பு பச்சிளம் குழந்தையுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் விரைந்து வந்து அவரிடம் நேரில் விசாரணை செய்தனர். கெளசல்யா தனது கணவரை மீட்டு தரக்கோரி கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கண்ணீர் மழ்க வேண்டுகோள் விடுத்தார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 289

0

0