சிறுமியை கடத்தி திருமணம்: புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

6 July 2021, 9:35 pm
Quick Share

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபர் உட்பட மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த குமரக்கோட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளிச் சிறுமி கடந்த, 30 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் காணவில்லை என அவரது பெற்றோர் நண்பர்கள் வீடு உறவினர்கள் வீடு என பல்வேறு பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து பாப்பிரெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

விசாரணையில், அச்சிறுமியை அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த சென்னப்பன் என்பவர் சிறுமியை கடத்தி சென்று மேச்சேரியில் வைத்து திருணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மேச்சேரிக்கு சென்று சிறுமியை மீட்டு சென்னப்பன் மற்றும் கடத்தலுக்கு உடைந்தையாக இருந்த சுகவனம், சித்தப்பா ரவிக்குமார் ஆகிய மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

Views: - 260

1

0