கொரோனாவிலும் சொகுசு காருக்குள் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்.. 3 ஆண்கள், 2 பெண்களை அள்ளி கொண்டு போன போலீஸ்..!

14 August 2020, 9:21 pm
Quick Share

சென்னை: சென்னை வேளச்சேரியில் சொகுசு காருக்குள் விபச்சாரம் செய்த மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை சுற்றிவளைத்து போலீஸ் கூண்டோடு கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போலீஸாருக்கு வேளச்சேரியில் 2 சொகுசு கார்கள் நீண்ட நேரமாக நிற்பதாகவும், அந்த காருக்குள் பாலியல் தொழில் நடப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவிலம்பாக்கம் என்ற பகுதியில் 2 சொகுசு கார்கள் அருகருகே நின்று கொண்டிருந்தது. அந்த காரில் இரண்டு பெண்களும் மற்றொரு காரில் மூன்று ஆண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், போலீசார் அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையின் போது இதே கும்பல் அதே பகுதியில் உள்ள இன்னொரு வீட்டிலும் 5 பெண்களை அடைத்து வைத்திருந்தது அம்பலமானது. இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்து ஐந்து பெண்களையும் மீட்டு காப்பகத்தில் சேர்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலியல் தொழில் நடத்திய மூன்று இளைஞர்களை கைது செய்தனர். இவர்கள் சென்னையின் முக்கிய பகுதிகளில் 2 சொகுசு கார்களில் விபச்சாரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Views: - 2

0

0