கொரோனா சுழலில் சிக்கிய 3 மாவட்டங்கள் : மீண்டும் உச்சமடையும் பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2022, 7:33 pm
Corona Status - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 1728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 52 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 662 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 5 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில், இன்று ஒரே நாளில், 876 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 158 பேருக்கும், கோவை மாவட்டத்தில், 105 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 326

0

0