3 கிலோ தங்கம், ரூ.8 லட்சம் பணம் கொள்ளை : ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் கைவரிசை!!

9 November 2020, 10:11 am
3 KG Gold Theft - Updatenews360
Quick Share

வேலூர் : ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் 3 கிலோ தங்கம் 8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் வள்ளலார் 15வது குறுக்கு தெருவில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் சந்திரன் (வயது 63) வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை விருதம்பட்டிலுள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்வதற்காக சென்றுள்ளார். மீண்டும் இரவு 10 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவை உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த மூன்று கிலோ தங்கம் மற்றும் 8 லட்சம் பணம் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டது.

மகள் திருமணத்திற்காக தங்க நகை மற்றும் பணம் சேர்த்து வைத்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.

ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் மூன்று கிலோ தங்கம் 8 லட்சம் பணம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 24

0

0