மர்மநபர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்ட 3 பேர் பலி : ஈரோடு அருகே பரிதாபம்.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 2:43 pm
Tablet Dead- Updatenews360
Quick Share

ஈரோடு : சென்னிமலையில் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட மூவர் உயிரிழந்த சம்பவத்தில் 2 நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள பெருமாள்மலை சேனாங்காட்டுதோட்டம் பகுதியில் கருப்பண்ணகவுண்டர் எனப்வர் தனது மனைவி மல்லிகா, மகள் தீபா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக கூறி கருப்பண்ணகவுண்டர், மல்லிகா,தீபா மற்றும் குப்பாள் ஆகிய நால்வருக்கும் மாத்திரை கொடுத்து சாப்பிட கூறியுள்ளார்.

பின்னர் கொரோனா பரிசோதனை செய்வது போல நடித்து கொரோனா இல்லை என கூறி அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட நால்வரும் வாந்தி மற்றும் மயக்கமடைந்ததை அடுத்து மகள் தீபா தனது கணவருக்கு தகவல் தெரிவிக்க நால்வரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மல்லிகா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார் .

இதில் தீபா மற்றும் குப்பாள் ஆகிய இருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கொடுக்கல் வாங்கல் என கூறப்படுகிறது

Views: - 337

1

0